முகப்பு /செய்தி /இந்தியா / தாடி வளர்த்தால் ரூ.51 ஆயிரம் அபராதம்.! - குஜராத்தின் 50 கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட விநோத தீர்மானம்!

தாடி வளர்த்தால் ரூ.51 ஆயிரம் அபராதம்.! - குஜராத்தின் 50 கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட விநோத தீர்மானம்!

அஞ்சனா சவுத்ரி சங்கத்தின் பஞ்சாயத்து கூட்டம்

அஞ்சனா சவுத்ரி சங்கத்தின் பஞ்சாயத்து கூட்டம்

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தனேரா தாலுகாவை சேர்ந்த அஞ்சனா சவுத்ரி (Anjana Chaudhary) என்ற சமூகத்தினர் இளைஞர்கள் ஸ்டைலுக்காக தாடி வளர்க்கவும், திருமணங்கள் போன்ற பல சந்தர்ப்பங்களில் DJ பார்ட்டி கலாச்சாரத்தை பின்பற்றவும் தடை விதித்துள்ளனர். பனஸ்கந்தா மாவட்டம் அஞ்சனா சவுத்ரி சமூகத்தின் 54 கிராமங்களை உள்ளடக்கியது.  

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தனேரா தாலுகாவை சேர்ந்த அஞ்சனா சவுத்ரி (Anjana Chaudhary) என்ற சமூகத்தினர் இளைஞர்கள் ஸ்டைலுக்காக தாடி வளர்க்கவும், திருமணங்கள் போன்ற பல சந்தர்ப்பங்களில் DJ பார்ட்டி கலாச்சாரத்தை பின்பற்றவும் தடை விதித்துள்ளனர். பனஸ்கந்தா மாவட்டம் அஞ்சனா சவுத்ரி சமூகத்தின் 54 கிராமங்களை உள்ளடக்கியது.

அஞ்சனா சவுத்ரி சமூகம் பனஸ்கந்தாவின் கனேரா தாலுகாவில் உள்ள கிராமங்களில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு மற்ற சமூகங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இந்நிலையில் அஞ்சனா சவுத்ரி சங்கத்தின் பஞ்சாயத்து கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கானேராவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல சீர்திருத்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, அவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு சங்க உறுப்பினர்காளால் ஏற்று கொள்ளப்பட்டும் உள்ளன. சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீறுபவர்கள் கடும் அபராதம் செலுத்த நேரிடும், சில தீவிர சந்தர்ப்பங்களில் ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கூறியிருக்கும் அஞ்சனா சவுத்ரி சமூகத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் சிலர், இனி தங்கள் சமுதாயத்தில் நடக்கும் திருமணங்களில் உணவு பரிமாற வெளியில் இருந்து வாடகைக்கு ஆட்களை அழைத்து வரும் பழக்கம் இருக்காது என தெரிவித்துள்ளனர். அதே போல இளைஞர்கள் தாடி வளர்த்தால் ரூ.51,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கவனம் ஈர்த்துள்ளது.

தீர்மான கூட்டத்தில் பேசிய ஷிகர்புராவை சேர்ந்த கதிபதி தயாராம்ஜி மகராஜ், இந்து மதத்தில் தாடி வைப்பது என்பது துறவிகள் மற்றும் ஞானிகள் செய்ய கூடிய செயல். அவர்கள் மட்டுமே தாடி வைக்க வேண்டும். ஆனால் இளைஞர்கள் இப்படி தாடி வைத்து கொண்டு திரிவது ஒத்து வராது என பேசினார். இதனை தொடர்ந்து அஞ்சனா சவுத்ரி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இனி தாடி வளர்க்க கூடாது என்ற தீர்மானமும் நிறைவேறியது. எனவே தாடியுடன் நடமாடும் இளைஞர்கள் தங்களது தாடியை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டு அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

top videos

    அஞ்சனா சவுத்ரி சமூகத்தின் தலைவர் ரைமல் பாய் படேல் பேசுகையில், சமூக சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்துடன், சமுதாயத்தில் வீண் செலவுகளை தடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதற்கு சமூக மக்கள் ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். திருமணங்களில் அதிக ஒலி எழுப்பும் டிஜே இசையை பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடிவை தவிர திருமண விழாக்களில் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்துவது, திருமண நிகழ்வுகளில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களை சால்வை, தலைப்பாகை அணிவித்து வரவேற்க வேண்டும், திருமண அழைப்பிதழ்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் 22 விதிகளை அப்பகுதியின் 54 கிராமங்களுக்கு அஞ்சனா சௌத்ரி சமாஜ் அறிவித்துள்ளது.

    First published:

    Tags: Gujarat