முகப்பு /செய்தி /இந்தியா / ஜி.எஸ்.டி. அமைப்பு முறையில் மாற்றம்.. தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி உறுதி!

ஜி.எஸ்.டி. அமைப்பு முறையில் மாற்றம்.. தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி உறுதி!

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

நாட்டின் கோடீஸ்வர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தற்போதையை ஆட்சி நடைபெறுவதாக ராகுல் காந்தி விமர்சித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஜி.எஸ்.டி. அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாக விமர்சித்தார்.

இதையும் வாசிக்க: தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து... ” - அமித் ஷா அதிரடி..!

top videos

    நாட்டின் கோடீஸ்வர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தற்போதையை ஆட்சி நடைபெறுவதாக ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, பணக்காரர்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ததாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்

    First published:

    Tags: Rahul Gandhi