முகப்பு /செய்தி /இந்தியா / திருமணத்தன்று விஷம் அருந்திய காதல் ஜோடி.. மணமகன் மரணம் - பகீர் தகவல்

திருமணத்தன்று விஷம் அருந்திய காதல் ஜோடி.. மணமகன் மரணம் - பகீர் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருமண நிகழ்வின் போது மணமக்கள் இருவரும் விஷமருந்திய அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் 20 இளம்பெண்ணுக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்துள்ளது. இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த இளைஞரிடம் காதலி தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தி வந்துள்ளார்.

உடனே திருமணம் செய்து கொள்ள இளைஞருக்கு விருப்பமில்லை. தான் தன்னுடைய தொழிலில் செட்டில் ஆக இரண்டு ஆண்டுகால அவகாசம் தர வேண்டும் என காதலியிடம் கோரியுள்ளார். ஆனால், பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. அத்துடன் தன்னை திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றுவதாக காதலன் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் மணமகனிடம் பேசி அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர். உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மணப்பெண் விடாப்பிடியாக வற்புறுத்தியதன் பேரில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கனாடியா என்ற பகுதியில் உள்ள ஆர்ய சமாஜம் கோயிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய் கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தான் மணமகன் விபரீத காரியத்தை செய்துள்ளார். தனது விருப்பமில்லாமல் தற்போது திருமணம் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் விஷம் குடித்துள்ளார். தொடர்ந்து தான் விஷம் அருந்திவிட்டேன் என மணமகள், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். விஷயமறிந்து பதறிப்போன அவரது பெற்றோர் மணமகனை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இருப்பினும்,  மணமகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில் டைவர்ஸ் கேட்கின்றனர்... உச்சநீதிமன்றம் கருத்து...!

top videos

    இதற்கிடையே, மணமகன் விஷம் குடித்த தகவலைக்கேட்டு மணப்பெண்ணும் விஷம் குடித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    First published:

    Tags: Lovers, Madhya pradesh, Suicide