முகப்பு /செய்தி /இந்தியா / தன்பாலினத் திருமணம் - அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்கும் மத்திய அரசு

தன்பாலினத் திருமணம் - அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்கும் மத்திய அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

Same-Sex Marriage In India | தன்பாலின திருமணத்தை அங்கீரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

தன்பாலினத் திருமணத்தை அங்கீரிக்கும் விவகாரம் தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சட்டத்துறைச் செயலாளர் நிதின் சந்திரா எழுதியுள்ள கடிதத்தில், திருமணச் சட்டங்கள் அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், திருமணம் தொடர்பான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கும் பங்கு இருப்பதால், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் தன்பாலின திருமண வழக்கில், அனைத்து மாநில அரசுகளையும் பிரதிவாதியாக சேர்க்க வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முகத்தை உடைத்துவிடுவேன்... மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்து மிரட்டிய நடத்துநர் பணியிடை நீக்கம்

top videos

    தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்குவதில் மாநில அரசுகளின் கருத்துகள் முதலில் கேட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள மத்திய சட்டத்துறைச் செயலாளர், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, தன்பாலின திருமணத்தை அங்கீரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: LGBT