ஆந்திரா அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆட்டு கிடாய் சண்டை போட்டியை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கோடுமூரூ கிராமத்தில் அமைந்திருக்கும் வல்லம்பாதேவி கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் திருவிழாவின் போது கிடாய் சண்டை போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு போட்டியை விரிவான வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்த கிராம பொதுமக்கள் போட்டியில் வெற்றி பெறும் கிடாய்களுக்கு தலா ரூ, 20,000 முதல் ரூ5,000 வரை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். தொடர்ந்து நேற்று கிடாய் சண்டையும் களைகட்டியது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயிற்சி அளித்து வளர்க்கப்படும் 16 ஆட்டுக்கிடாய்களை அவற்றின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் பார்வையாளர்களின் உற்சாக சத்தத்திற்கு இடையே 5 சுற்றுக்களாக ஆட்டுக்கிடாய் சண்டை போட்டி நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆட்டுக்கிடாய் சண்டை போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கல்லுதேவரகொண்டா கிராமத்தில் இருந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்ட பெரிய ஆட்டு கிடாய் ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அந்த கிடாய் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயை பரிசை தன்னுடைய உரிமையாளருக்கு வாங்கி கொடுத்தது .
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Tirupathi