முகப்பு /செய்தி /இந்தியா / 300 அடி ஆழம்... 55 மணி நேர போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சோகம்!

300 அடி ஆழம்... 55 மணி நேர போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சோகம்!

ஆழ்த்துளை கிணற்றில் உயிரிழந்த குழந்தை

ஆழ்த்துளை கிணற்றில் உயிரிழந்த குழந்தை

முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை, படிப்படியாக சறுக்கி சுமார் 300 அடி ஆழத்திற்கு சென்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்திய பிரதேச மாநிலம் சேஷோர் மாவட்டத்தின் முன்கவுலி கிராமத்தில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை செவ்வாய்க்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர், குழந்தை 20 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உயிரை காப்பாற்ற ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றை சுற்றி குழிகள் தோண்டி, குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது.

ஆனால், 20 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை, படிப்படியாக சறுக்கி சுமார் 100 அடி ஆழத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து ராணுவம், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீட்பு பணியில் களம் இறங்கினர். ரோபோட்டின் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. சுமார் 55 மணிநேரத்திற்கு பிறகு சுயநினைவற்ற நிலையில் 2வயது குழந்தை மீட்கப்பட்டது.

ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Borewell Hole, Madhya pradesh