முகப்பு /செய்தி /இந்தியா / பெற்றோர் விருப்பத்தை மீறி காதலனை கரம்பிடித்த இளம்பெண்... கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை

பெற்றோர் விருப்பத்தை மீறி காதலனை கரம்பிடித்த இளம்பெண்... கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை

மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை

மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை

போலீசாரிடம் பிரியா தனது காதலனுடன் தான் செல்வேன் குடும்பம் வேண்டாம் என்று கூறியது அவரது தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

தனது விருப்பத்தை மீறி மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் தந்தை அவருக்கு இறுதி சடங்குகள் செய்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பரபரப்பு சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ரத்தன்புரா மாவட்டத்தில் வசிக்கும் 19 வயது இளம் பெண் பிரியா 15 நாள்களுக்கு முன்னர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணை இளம் பெண் பிரியா ஒரு இளைஞரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. தனது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தரமாட்டார்கள் என பிரியா வீட்டிற்கு தெரியாமல் அங்கிருந்து வெளியேறி இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

கண்ணீர் அஞ்சல் போஸ்டர்

பிரியாவையும் அந்த இளைஞரையும் போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு பிரியாவின் குடும்பத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் தனது காதலனுடன் தான் சேர்ந்து வாழ்வேன், குடும்பத்தார் வேண்டாம் என்றுள்ளார். பிரியா 18 வயதை தாண்டியவர் என்பதால், அவரது ஜோடியுடன் அனுப்பிவைக்கப்பட்டார். பிரியாவின் செயலால் அவரது தந்தை மிகவும் மனம் உடைத்தது போனார்.

இதையும் படிங்க: மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டல்... போக்சோ வழக்கில் அரசுப் பள்ளி முதல்வர் கைது!

அன்றைய தினமே தனது இறந்துவிட்டதாக கூறி இரங்கல் செய்தியை உறவினருக்கு தெரிவித்து, இறுதி சடங்கு வாருங்கள் என்றுள்ளார். அத்துடன் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி என்று துக்க கடிதம் அச்சடித்து விநியோகித்த தந்தை, உறவினரை காரிய சாப்பாடுக்கு அழைத்துள்ளார். இந்த சம்பவமும் பிரியாவின் தந்தை அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

First published:

Tags: Love marriage, Rajasthan