உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ பிராம் தத் திவேதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது அன்சாரியின் நெருங்கிய கூட்டாளியும் உதவியாளருமான சஞ்சீவ் ஜீவா என்பவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சீவ் ஜீவா மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், சஞ்சீவ் ஜீவா நிகழ்விடத்தில் உயிரிழந்தார். மேலும் ஒரு குழந்தையும், காவல் அதிகாரியும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இது தான் ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யார் கொலை செய்யப்பட்டார்கள் என்பது முக்கியமல்ல என்று கூறியுள்ள அவர், கொலை நிகழ்ந்திருக்கிறது என்றால் சட்டம் ஒழுங்கு உள்ளதா என்று வினவியுள்ளார்.
#WATCH | Uttar Pradesh: Gangster Sanjeev Jeeva shot outside the Lucknow Civil Court. Further details awaited
(Note: Abusive language) pic.twitter.com/rIWyxtLuC4
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 7, 2023
மேலும் படிக்க... சரக்கு ரயில் மோதி 6 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு... ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து
முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நிகழ்ந்த கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder, Uttar pradesh