முகப்பு /செய்தி /இந்தியா / அத்திக் அகமது உடலில் 9 குண்டுகள்... இறப்புக்கு காரணம் இதுதான்... ? பரபரப்பு தகவல்கள்...!

அத்திக் அகமது உடலில் 9 குண்டுகள்... இறப்புக்கு காரணம் இதுதான்... ? பரபரப்பு தகவல்கள்...!

அத்திக் அகமது படுகொலை

அத்திக் அகமது படுகொலை

உயிரிழந்த அத்திக் அகமதுவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அத்திக் உடலில் 9 குண்டுகள் பாய்ந்ததாகவும், தலையில் மட்டும் 3 குண்டுகள் பாய்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரபல அரசியல்வாதியும், மாபியா கும்பல் தலைவனுமான அத்திக் அகமது ஏப்ரல் 15ஆம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் இவர், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். 5 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் அத்திக் அகமது, அவரது மகன்கள் உள்ளிட்ட பலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் கடந்த 15ஆம் தேதி பிரயாக் ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் போல வந்த சிலர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர்களை சுட்டு கொன்றனர். அத்திக் அகமது, அஸ்ரப் இருவரையும் கொலை செய்த மூவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

உயிரிழந்த அத்திக் அகமதுவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அத்திக் உடலில் 9 குண்டுகள் பாய்ந்ததாகவும், தலையில் மட்டும் 3 குண்டுகள் பாய்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. உடலின் மற்ற பாகங்களில் 6 குண்டுகள் பாயந்துள்ளன. 7 குண்டுகள் உடலை துளைத்து வெளியே வந்துள்ளன. இரு குண்டுகள் உடலிலேயே சிக்கியுள்ளது.

இதையும் படிங்க: 11,684 கோடியில் சொத்துகள், 160 வழக்குகள், ஐஎஸ்ஐ தொடர்பு: அஷ்ரப், ஆதிக் அகமதுவின் குற்ற அறிக்கை விபரம்!

top videos

    அதேபோல, அஸ்ரப் உடலில் மொத்தம் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. முகத்தில் ஒரு குண்டும், மற்ற பகுதிகளில் 4 குண்டுகளும் பாய்ந்துள்ளன. இருவரின் உடலின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குண்டு பாய்ந்ததால் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: Crime News, Uttar pradesh