முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் மக்கள் வெளியேற கூடாது.. கோலாகலமாக கொண்டாடப்படும் ஜாதரா பண்டிகை..!

திருப்பதியில் மக்கள் வெளியேற கூடாது.. கோலாகலமாக கொண்டாடப்படும் ஜாதரா பண்டிகை..!

கோப்பு படம்

கோப்பு படம்

திருப்பதியின் கிராம தெய்வம் என்று அழைக்கப்படும் ஸ்ரீததயகுண்டா சின்னகங்கம்மா ஜாதரா பண்டிகையானது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தேரோட்டத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மக்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக ஜாதரா என்ற பழங்குடி இன பண்டிகை கோலாகமாக கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் இந்த பண்டிகை தனித்துவமான சிறப்புகளுடன் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு திருப்பதியில் கங்கம்மா ஜாதரா தொடங்கியது. திருப்பதியின் கிராம தெய்வம் என்று அழைக்கப்படும் ஸ்ரீததயகுண்டா சின்னகங்கம்மா ஜாத்ரா பண்டிகையானது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தேரோட்டத்துடன் தொடங்கியது.

அம்மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திருப்பதி ஜாதரா பண்டிகையை சமீபத்தில் அரசு விழாவாக அறிவித்தார். எனவே கங்கம்மா ஜாதரா அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பண்டிகை கொண்டாட்டம் இதுவாகும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைகால குலத்தினர் பேரிவீதியில் முதல் பூஜை செய்தனர். இதை தொடர்ந்து ஜாதரா பண்டிகை தொடங்குவதா அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திருப்பதி ஸ்ரீதத்யகுண்டா சின்னகங்கம்மா ஜாதரா விழா கோலாகலமாக தொடங்கியது.

அடுத்த நாள் காலை புதன்கிழமை காலை 8 மணியளவில் கோயில் வளாகத்தில் உள்ள அம்மனின் விஸ்வரூப கொடிஸ்தம்பத்துக்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர். கங்கா ஜாதராவின் ஒரு பகுதியாக புதன்கிழமை பைராகி வேடமணிந்த பக்தர்கள் வழிபாடு நடத்தினர் பைராகி வேஷம் அணிந்தவர்கள் குழுவாகப் புறப்பட்டு முதலில் வேஷாலம்மாவையும், ஸ்ரீதல்லபாகா பெத்தகங்கம்மாவையும் தரிசித்துவிட்டு ஸ்ரீதத்தையகுண்டா கங்கம்மா கோயிலை அடைந்தனர். அவர்கள் கோவிலை வலம் வந்து அம்மனின் விழுந்து வணங்கி காலடியில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அரசு சார்பில் திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர் ரெட்டி அம்மனுக்கு சேலை வழங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்தும் சேலை பெறப்படுகிறது. இவ்விழாவிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தத்தையகுண்டா கங்கம்மா ஜாதரா 900 வருட வரலாறு உண்டு. கிராம தெய்வமாக வணங்கப்படும் கங்கம்மா திருமலை திருப்பதி பெருமாளின் தங்கையாக மக்களால் வணங்கப்படுகிறார். ஒருவாரம் நடக்கும் கங்கம்மா திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற கூடாது வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இங்கு இரவில் தங்கக்கூடாது. இருட்டுவதற்கு முன் புறப்பட வேண்டும் போன்ற விதிகள் பின்பற்றப்படுகிறது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவையா...? கருத்துக் கணிப்புகள் முழு விவரம் இதோ...!

திருவிழாவின் போது மக்கள் வினோதமான அலங்காரத்தில் சென்று அம்மனை தரிசிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்கள் பெண் வேடமிட்டு அம்மனை தரிசிக்கிறார்கள். இவ்வாறு செய்தால் அம்மன் அருள்பாலித்து வேண்டுதல்கள் நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

top videos

    திருப்பதி கங்கம்மா ஜாதராவிற்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அம்மனுக்கு புடவை மற்றும் காணிக்கைகளை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர். மே 9ம் தேதி தொடங்கிய இந்த திருவிழா மே 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை அரசு விழாவாக அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    First published:

    Tags: Festival, Tirupati