முகப்பு /செய்தி /இந்தியா / முதலமைச்சர் பதவி வழங்கினால் சிறப்பாக செயல்படுவேன்... பரமேஸ்வரா அதிரடி பேட்டி..!

முதலமைச்சர் பதவி வழங்கினால் சிறப்பாக செயல்படுவேன்... பரமேஸ்வரா அதிரடி பேட்டி..!

டி.கே.சிவக்குமார் - பரமேஸ்வரா

டி.கே.சிவக்குமார் - பரமேஸ்வரா

Karnataka CM Post | முன்னாள் துணை முதலமைச்சரான பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தும்கூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Chennai, India

முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் திறம்பட பணியாற்றுவேன் என பட்டியல் இனத் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். 

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றுள்ள நிலையில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே யார் முதலமைச்சர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் பதவி இல்லாவிடில், சாதாரண எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருப்பேன் என சிவக்குமார் கூறியதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பங்காற்றாத சித்தராமையா, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என தொடர்ந்து பதவியில் இருந்து வருவதாகவும் சிவக்குமார் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சித்தராமையா தனது ஆட்சிக்கால சாதனைகளை பட்டியலிட்டு மனுவாக கார்கேவிடம் வழங்கியதாகத் தெரிகிறது.

இருவரும் முதலமைச்சர் பதவியை கேட்பதால், கார்கே மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக நேற்று அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடனும் ஆலோசித்தார். மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால் விரைவில் முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் என்றார்.

மேலும் படிக்க... ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரவேற்பு இல்லை... உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்...!

top videos

    இதனிடையே தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் திறம்பட பணியாற்றுவேன் என பட்டியல் இனத் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். முன்னாள் துணை முதலமைச்சரான பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தும்கூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Congress, Karnataka congress