முகப்பு /செய்தி /இந்தியா / கையில் குடையுடன் சாமானியர் போல தெருக்களில் நடந்து சென்ற அம்ரித் பால் சிங்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

கையில் குடையுடன் சாமானியர் போல தெருக்களில் நடந்து சென்ற அம்ரித் பால் சிங்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

கையில் குடையுடன் அம்ரித் பால் சிங்

கையில் குடையுடன் அம்ரித் பால் சிங்

பஞ்சாப் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் அம்ரித் பால் சிங் ஹரியானா தெருக்களில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Haryana, India

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக கொண்டு சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக செயல்பட்டு வரும் நபர் அம்ரித்பால் சிங். கடந்த மாதம் இவரது ஆதரவாளர்கள் சிலர் ஆள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அம்ரித்பால் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து சூறையாடி தனது ஆதரவாளர்களை வெளியே கொண்டுவந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து அம்ரித்பாலை கைது சய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை மார்ச் 18ஆம் தேதி களமிறங்கியது. ஆனால், தகவல் அறிந்து அம்ரித்பால் தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.

அம்ரித்பாலின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் 'வாரிஸ் பஞ்சாப் டி'அமைப்பை சேர்ந்த பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். சுமார் 6 நாள்கள் ஆகியும் போலீஸ் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டி வரும் அம்ரித் பால் சிங் தற்போது பஞ்சாப்பை விட்டு தப்பியோடி, ஹரியானாவில் தலைமறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இவர் ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத் பகுதியில் உள்ள கூட்டாளியின் வீட்டில் பதுங்கி இருப்பதும், தெருக்களில் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு நடந்து திரிந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்ரித் பால் சிங் பேண்ட் சட்டை அணிந்துகொண்டு தெருக்களில் நடந்து செல்கிறார். தனது முகம் வெளிப்பட்டு விட கூடாது என கையில் குடை பிடித்துக்கொண்டு நடக்கிறார்.

இதையும் படிங்க: சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

top videos

    இந்த சிசிடிவி பதிவானது மார்ச் 20ஆம் தேதி மத்தியம் 12.18 மணி அளவில் பதிவாகியுள்ளது. கைது நடவடிக்கை தொடங்கிய இடத்தில் இருந்து சுமார் 200 கிமீ தூரம் தப்பியோடி இவர் ஷாஹாபாத்தில் பதுங்கியுள்ளார். அவருக்கு அன்றைய தினம் அடைக்கலம் கொடுத்த பல்ஜித் கவுர் என்ற பெண்ணை கைது செய்து ஹரியானா காவல்துறை விசாரித்து வருகிறது. தலைமறைவாக உள்ள அம்ரித் பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தொடர் தேடுதல் வேட்டையில் உள்ளனர்.

    First published:

    Tags: CCTV, Punjab