முகப்பு /செய்தி /இந்தியா / ‘தாஹி’ வேண்டாம்.. ‘தயிர்’ போதும் - அறிவிப்பை திரும்ப பெற்ற மத்திய உணவு தர கட்டுப்பாடு ஆணையம்!

‘தாஹி’ வேண்டாம்.. ‘தயிர்’ போதும் - அறிவிப்பை திரும்ப பெற்ற மத்திய உணவு தர கட்டுப்பாடு ஆணையம்!

உணவு தர கட்டுப்பாடு ஆணையம் அறிவிப்பு

உணவு தர கட்டுப்பாடு ஆணையம் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிருந்த நிலையில் மாநில மொழிகளிலேயே தயிர் பெயரைக் குறிப்பிடலாம் என மத்திய உணவு தரக்கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய உணவு தர கட்டுப்பாடு ஆணையம் திரும்ப பெற்றது.

தயிர் பாக்கெட்களில் தஹி என்ற இந்தி வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர் பாக்கெட்களில் இந்தி வார்த்தை இடம்பெறாது என்று அமைச்சர் நாசர் கூறினார். மேலும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என்று டிவிட்டரில் பதிவிட்டு இருந்த மு.க.ஸ்டாலின், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று எச்சரித்து இருந்தார்.

இதையும் படிங்க... தயிர் பாக்கெட்டில் ‘தஹி’க்கு ‘நஹி’ சொன்ன தமிழ்நாடு அரசு... மத்திய அரசை எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பிற்கு எதிர்வினை ஆற்றினர்.

இந்நிலையில், தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உணவு தர கட்டுப்பாடு ஆணையம் திரும்ப பெற்றது. ஆங்கில வார்த்தையுடன் உள்ளூர் மொழியை அடைப்பு குறியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Aavin, Imposing Hindi