முகப்பு /செய்தி /இந்தியா / பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்... நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்... நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!

பிரகாஷ் சிங் பாதல்

பிரகாஷ் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

  • Last Updated :
  • Punjab, India

சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான பிரகாஷ் சிங் பாதலுக்கு, கடந்த வாரம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

‘இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் நேற்று உயிரிழந்தார். இதனை அவரது மகனும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் உறுதி செய்தார். 5 முறை முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதல், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவை ஒட்டி, தேசிய அளவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதல் மரணம் தொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

அதில், இந்திய அரசியலின் மகத்தான ஆளுமையாக விளங்கிய பாதல், நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கினார் என குறிப்பிட்டார். பிரகாஷ் சிங் பாதலின் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்றும், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

First published:

Tags: Death, Punjab