முகப்பு /செய்தி /இந்தியா / தொண்டரின் கன்னத்தில் அறைந்த சித்தராமையா... வீடியோ வைரலாகி பரபரப்பு..!

தொண்டரின் கன்னத்தில் அறைந்த சித்தராமையா... வீடியோ வைரலாகி பரபரப்பு..!

தொண்டரை அறைந்த சித்தராமையா

தொண்டரை அறைந்த சித்தராமையா

காங்கிரஸ் தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவுரை கூறியபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹரிஹரா தொகுதி எம்.எல்.ஏவான ராமப்பா தனக்கு இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரது தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு ராமப்பாவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொண்டர்களுக்கு சித்தராமையா அறிவுரை கூறியபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தொண்டர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பாஜகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

First published:

Tags: Congress, Karnataka, Siddaramaiah