முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கைதா..? டெல்லி போலீசார் விளக்கம்

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கைதா..? டெல்லி போலீசார் விளக்கம்

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கை தாங்கள் கைது செய்யவில்லை என டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

  • Last Updated :
  • Delhi, India

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது.

இதில் மோசடி நடைபெற்றதாகக் கூறி இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சத்யபால் மாலிக், காப்பீடு வழக்கில் சிபிஐ சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து தான் பதிலளிப்பேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சத்தியபால் மாலிக் டெல்லி ஆர்.கே புறத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த தகவலை டெல்லி போலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதையும் படிக்க : மேற்கு வங்கத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி..

இதுகுறித்து டெல்லி மாநகர துணை கமிஷ்னர் (தென்மேற்கு), “நாங்கள் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கை கைது செய்யவில்லை. அவர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என நாங்கள் தெரிவித்துள்ளோம்” என கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து மேலும் ஓர் காவல்துறை அதிகாரி, “நாங்கள் அவரை கைது செய்யவில்லை. அவர் ஆர்.எஸ் புரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்பது பின்னர் தான் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு அவர் காவல்நிலையத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என போலிசார் தெரிவித்தனர்” என கூறினார்.

மேலும் இந்த சர்ச்சைக்கு பிறகு டெல்லி போலிஸாரின் அதிகார ட்விட்டர் பக்கத்திலேயே அவர் கைது செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளனர்.

top videos

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் போது, வீரர்களுக்கு விமான வசதி செய்து தரப்படவில்லை என சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பின்னர் சிபிஐ இவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Arrested, CBI, Delhi, Governor