கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஜெகதீஷ் ஜெட்டரின் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றிய தன்னை, பாஜக நடத்திய விதம் வேதனை அளிப்பதாக கூறினார். தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ தனது ஹூப்ளி-தர்வாட் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன் எனக்கூறிய அவர், இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Karnataka Election 2023