முகப்பு /செய்தி /இந்தியா / இது புதுசு! - ரேஷன் கடைகளில் உணவு பொருள்களை வழங்கும் 'உணவு தானிய ஏடிஎம்கள்'

இது புதுசு! - ரேஷன் கடைகளில் உணவு பொருள்களை வழங்கும் 'உணவு தானிய ஏடிஎம்கள்'

உணவு தானிய ரேஷன் ஏடிஎம்

உணவு தானிய ரேஷன் ஏடிஎம்

பணம் எடுக்கப்படும் ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த எந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

ரேஷன் கடைகளில் எளிய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள் வாங்குவது வழக்கம். இந்த ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பணிக்கு வந்த பொருள்கள் விநியோகம் செய்யும் நேரம் எப்போது, என்னென்ன பொருள்கள் உள்ளன என்பதை பார்த்து மக்கள் வாங்குவது மக்கள் நேரத்தையும் அதிகம் விரயமாக்குகின்றது.

எளிய மக்கள் தங்களின் மற்ற வேலைகளை விட்டு விட்டு ரேஷன் பொருள்களை வாங்குவதற்காக கடைகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் சில மாநிலங்களில் 'ரேஷன் ஏடிஎம்கள்' தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. பணம் எடுக்கப்படும் ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த எந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது போன்ற 3 ரேஷன் தானிய ஏடிஎம் எந்திரங்கள் கடந்த மார்ச் 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளன. அம்மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த எந்திரங்கள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றனர்.

இந்த பகுதியில் சுமார் 150 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை அடையளம் மூலம் சரிபார்ப்பு செய்த பின்னர், இந்த எந்திரங்கள் மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: 20 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆல்டோ காரில் சட்டசபைக்கு சென்ற ஹிமாச்சல் முதலமைச்சர்

top videos

    லக்னோ மட்டுமல்லாது, வாரணாசி மற்றும் கோரக்பூர் பகுதிகளிலும் இந்த ரேஷன் ஏடிஎம் எந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 3 எந்திரங்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுபோன்ற 7 உணவு தானிய ஏடிஎம்கள் செயல்படுகின்றன. 30 நொடிகளிலேயே தங்களின் பொருள்களை பெறுவதால் நேரம் வெகுவாக மிச்சமடைகிறது எனக் கூறும் மக்கள், எந்திரம் விநியோகம் செய்வதால் பொருள்களை குறைத்து போட்டு மோசடி செய்ய முடியாது என திருப்தியுடன் கூறுகின்றனர்.

    First published:

    Tags: ATM, Ration Shop, Uttar pradesh