முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்றம் திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது- நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

நாடாளுமன்றம் திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது- நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

புதிய நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்படுவது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர்கள் ஆர்.என் ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், ’நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை என தெரிவித்தார். மேலும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் தான், தற்போது நாடாளுமன்ற கட்டத்தை முர்மு திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தின் கோவில் தான் நாடாளுமன்றம். மக்களுடைய பிரச்னையை பேசுவதற்கான இடம் அது. கோயிலுக்கு கொடுக்கும் மரியாதையை புறக்கணிப்பது நல்லதற்கு அல்ல. இந்த விழாவை எதிர்க்கட்சிகளின் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் ஆட்சி மாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் தற்போதும் பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், செங்கோலை தயாரித்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி கவுரவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Central Vista, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN