முகப்பு /செய்தி /இந்தியா / நெருப்பை அள்ளி வீசும் திருவிழா.. தீப்பந்தங்களால் ஜொலித்த அம்மன் கோயில்!

நெருப்பை அள்ளி வீசும் திருவிழா.. தீப்பந்தங்களால் ஜொலித்த அம்மன் கோயில்!

நெருப்பு திருவிழா

நெருப்பு திருவிழா

Fire festival : துர்கா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன வழிபாடு நடத்தினர்.

கட்டீல் கிராமத்தில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான துர்கா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒருபகுதியாக அட்டூர், கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

top videos

    தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசுவதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நூதன வேண்டுதலில் தீப்பந்தங்களை வீசி எறியும் போது யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Karnataka