முகப்பு /செய்தி /இந்தியா / மலையில் மோதி நொறுங்கிய பயிற்சி விமானம்... விமானியாக ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

மலையில் மோதி நொறுங்கிய பயிற்சி விமானம்... விமானியாக ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

மத்தியப் பிரதேச விமான விபத்து

மத்தியப் பிரதேச விமான விபத்து

விபத்தில் பெண் பயிற்சி விமானியும், பயிற்சியாளரும் உயிரிழந்த சோக சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் விரிக்ஷனா மகேஸ்வரி. பெரும் தொழிலதிபரின் மகளான இவர் விமானி ஆக வேண்டும் என்ற ஆசையில் IGRAU (Indira Gandhi Rashtriya Uran Akademi) பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலாகாட் பகுதியில் மகேல்வரி விமான பயிற்சிக்காக சென்றுள்ளார். இவருக்கு பயிற்சி அளிக்க மோகித் குமார் என்ற விமானி உடன் வந்துள்ளார். அங்குள்ள பிஸ்ரி விமான பயிற்சி தளத்தில் மதியம் 3 மணி அளவில் அனுமதி பெற்று பயிற்சியை மேற்கொண்டனர்.

விமானத்தை பயிற்சியாளர் கேப்டன் மோகித் குமார் ஓட்டியுள்ளார். இந்நிலையில், விமானம் ஓடு தளத்தில் இருந்து இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் புக்கோட்டலா என்ற கிராம பகுதியில் உள்ள மலைக்குன்றில் மோதி விபத்துக்குளானது. இந்த விமானம் மோதிய சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையும் படிங்க: தப்பியோடிய காலிஸ்தான் தலைவர்.. முடக்கப்பட்ட இணைய சேவைகள்... பஞ்சாப்பில் உச்சக்கட்ட பரபரப்பு..!

மோதி விழுந்த விமானம் தீப்பற்றி முழுமையாக சேதமடைந்தது. விபத்தில் கேப்டன் மற்றும் பெண் பயிற்சி விமானி இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமீர் சவ்ரப் விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மோசமான வானிலையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொளப்படுகிறது.

First published:

Tags: Flight Accident, Flight Crash, Madhya pradesh