நாட்டில் சமீப காலமகவே சாலை விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலை பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் கோர மரணங்களை ஏற்படுத்தும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இது தொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சாலை விபத்துகள் குறித்து மக்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சாலைப்போக்குவரத்து அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக பதில் தந்துள்ளது. அதன் படி, 2017-21 காலக்கட்டத்தில் மட்டும் நாட்டில் சுமார் 21.59 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இந்த 4 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் மேற்கண்ட விபத்துக்கள் மூலம் 7,36,129 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2020இல் மொத்தம் 3,66,138 விபத்துக்கள் நிகழ்ந்த நிலையில், 2021இல் இது 4,12,432 ஆக அதிகரித்துள்ளது. 2020இல் 1,20,806 பேர் மரணமடைந்த நிலையில், 2021இல் இந்த எண்ணிக்கை 1,42,163 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் வருமானத்தை அள்ளும் பெண்மணி… சம்பாதிக்க அசத்தலான டிப்ஸ்…
2021இல் நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் சுமார் 36 சதவீத மரணங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்துள்ளன. 2024க்குள் நாட்டில் இந்த விபத்து மரணங்களை பாதியாக குறைக்க அரசு முனைப்புடன் இருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accidents, Road Safety