உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் அளித்ததாக இவருக்கு சிங்குக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்த புகார்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பூஷன் சிங் மீது வழக்கப் பதிவு செய்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இவரை கைது செய்ய வேண்டும் எனவும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிரமாக போராடி வருகின்றனர்.
வீரர்களின் இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் பகுதிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் வீரர்களுக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ளன. இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதை நோக்கி பேரணி நடத்தப்போவதாக வீரர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து டெல்லியின் பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிய கிசான் சங்க விவசாய அமைப்பின் முன்னணி தலைவரான ராகேஷ் திகாயத் டெல்லி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்குவார்கள். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்களின் பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் காசிபூர் எல்லையில் குழும உள்ளோம்.
இதையும் படிங்க: மத நல்லிணக்க நிகழ்வு- நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை!
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள போலீசர்களை நீக்கவில்லை என்றால், நாங்கள் டிராக்டர் மூலம் கிளம்பி டெல்லியின் பல்வேறு எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு நுழைவோம் என எச்சரித்துள்ளார். அமைதி பேரணிக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பந்தோபஸ்த் போடப்பட்டுள்ளன. மேலும், டெல்லி-ஹரியானா எல்லையிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் திகாயத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Farmers Protest, Parliament, Wrestlers