முகப்பு /செய்தி /இந்தியா / மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு... தடுப்புகளை தகர்த்தெறிந்த விவசாயிகள்... டெல்லியில் பரபரப்பு...!

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு... தடுப்புகளை தகர்த்தெறிந்த விவசாயிகள்... டெல்லியில் பரபரப்பு...!

மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் ஆதரவு

மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் ஆதரவு

wrestlers protest | இரவில் மெழுகுவர்த்தியை ஏந்தியும் போராட்டம் நடத்திய சூழலில் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி வர ஆரம்பித்தனர்.

  • Last Updated :
  • New Delhi, India

டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற விவசாயிகள், காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை தகர்த்தெறிந்து முன்னேறியதால் பரபரப்பு நிலவியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாய அமைப்பினர் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: கட்சி செல்வாக்கைக் கடந்து ஆதிக்கம் செலுத்தும் சாதிகள்... கர்நாடகாவில் எந்தெந்த சாதிகளுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள்...

top videos

    இரவில் மெழுகுவர்த்தியை ஏந்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுக்கும் வகையில், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். அந்த தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசிவிட்டு, டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    First published:

    Tags: Delhi, Farmers Protest