முகப்பு /செய்தி /இந்தியா / விவசாயிகளின் புதுமையான விவசாய முறை..! அதிக உற்பத்தி மற்றும் அதிக லாபம்..

விவசாயிகளின் புதுமையான விவசாய முறை..! அதிக உற்பத்தி மற்றும் அதிக லாபம்..

பருவகால காய்கறிகள்:

பருவகால காய்கறிகள்:

நெல், கோதுமை போன்ற பாரம்பரிய விவசாயம் நஷ்டத்தைத் தரும் தொழிலாக இருந்தாகவும், அதனால் சிறிய நிலத்தில் காய்கறி சாகுபடியை மேற்கொண்டதாகவும் அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்ததாகவும் நவீன விவசாயம் செய்துவரும் லக்கிசராய் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பப்லு மஹதோ தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Lakhisarai, India

பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டத்தை தாங்கி வந்த லக்கிசராய் விவசாயிகளும் விவசாய முறையை மாற்றி நவீன விவாசாய முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இங்குள்ள விவசாயிகள் முன்பை விட தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

இந்தியாவில் நிலவும் மாறுபட்ட இயற்கை சூழல் மற்றும் வானிலை நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஒரு சில நில அமைப்புகள் உள்ளன. மாறுபட்ட காலநிலயால் அதிக வறட்சியையும் அதிக மழையயும் சில சமயம் வெள்ளத்தையும் கூட எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வியலும் அவ்வப்போது பாதிப்பு அடைவதும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதும் தொடர்ந்து நடைப்பெறும் நிகழ்வே. இப்படி மாறுபட்ட காலநிலைகளுக்கு நடுவிலும் விவசாயிகள் வேளாண்தொழிலை செய்துக்கொண்டு தான் வருகிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். நம் அனைவருக்கும் உணவு வழங்குபவர்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திர வசதிகளையும் பெற்றுள்ளனர். விவசாயிகள், விவசாயத்திற்கு புதிய மற்றும் தனித்துவமான முறைகளைப் பின்பற்றி, செழிப்பை நோக்கி முன்னெடுத்து செல்கின்றனர். இந்தியாவின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் பழைய முறை விவசாயத்தை கைவிட்டு புதுமையான முறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டத்தை தாங்கி வந்த இங்குள்ள விவசாயிகளும் விவசாய முறையை மாற்றி நவீன விவாசாய முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Read More : ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

இதனால் இங்குள்ள விவசாயிகள் முன்பை விட தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். பர்ஹியா, பிபரியா, சூர்யாகர்ஹா, ஹல்சி போன்ற தொகுதிகளில் இப்போது விவசாயிகள் குறைந்த அளவிலேயே நெல், கோதுமை பயிரிட்டாலும், நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் காய்கறிகளை பயிரிட்டு, அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது பாரம்பரிய விவசாயத்தை தவிர்த்து பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட துவங்கியுள்ளனர்.

நவீன விவசாயம் மூலம் பயனடைந்த விவசாயிகள்..

பப்லு மஹதோ, சுமன் சிங், அமித் சிங் போன்றோர், தற்போது காய்கறிளை விளைவித்து வருகின்றனர். இதற்கு முன்னர், நெல், கோதுமை போன்ற பாரம்பரிய விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்ததாகக் கூறுகின்றனர். மேலும் மகசூல் குறைவாக இருந்ததால், சோதனை முயற்சியாக சிறிய நிலத்தில் காய்கறி சாகுபடியை தொடங்கியதாகவும் இந்தச் சோதனை அவர்களுக்கு நல்ல மகசூலைக் கொடுத்ததுடன், பெரிய லாபமும் கிடைத்ததால் தொடர்ந்து அவர்கள் இந்த முறையை பின்பற்றுவதாகவும் தெரிவித்தனர். இப்பொழுது பெரிய அளவில் நவீன முறை விவசாயம் செய்து அதில் நல்ல மகசூலையும் வருவாயையும் பெற்றுவருகின்றனர்.

விவசாயி

இந்த காய்கறி சாகுபடி சோதனை, இந்த கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இப்போது ஏராளமான விவசாயிகள் லக்கிசரையில் காய்கறிகளை பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய விவசாயி பப்லு மஹதோ இந்த ஆரோக்கியமான மாற்றத்தால் தங்கள் குழந்தைகள் நல்ல பள்ளிகளுக்கு சென்று வருவதாகவும், முழு குடும்பமும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

மண்டிகள் மட்டுமல்ல, காய்கறிகளும் உள்ளூர் சந்தைகளில் எளிதாக விற்கப்படுகின்றன:

விவசாயிகள், வயலில் உள்ள காய்கறிகளைப் பறித்து, சாலையோரம் வைத்து விற்கின்றனர். இதனால் அந்த வழியாக போகும் மக்களும் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர். அதனை சந்தை விலையில் வாங்கவும் முன்வருகிறார்கள். இதனால் இருவருக்கும் பலன் கிடைக்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை அதிகம் அலையாமல், எளிதில் விற்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கும் சந்தை விலையில் கிடைக்கிறது. மண்டிகளில் கூட, எந்த முயற்சியும் இல்லாமல் காய்கறிகள் எளிதாக விற்கப்படுகின்றன.

First published:

Tags: India, Local News, Organic Farming