யூடியூபில் கவர்ச்சியான சாகச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யூடியூபர்கள் எடுக்கும் முயற்சிகள் சிலமுறை விபரீதத்தில் முடிகிறது. அத்தகைய சோக செயல் ஒன்று தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
'Pro Rider 1000' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தியவர் பிரபல யூடியூபரான அகஸ்தியா சென். 25 வயது இளைஞரான இவருக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியைச் சேர்ந்த இவர், பைக் சாகச வீடியோக்கள் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவரிடம் கவாசகி (Kawasaki Ninja ZX10R - a 1,000 cc) அதிவேக சூப்பர் பைக் இருந்துள்ளது. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு கடந்த புதன் கிழமை இந்த சூப்பர் பைக்கில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது தனது பாலோயர்களிடம் வீடியோவில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்வேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், ஆக்ரா- டெல்லியை இணைக்கும் யமுனா விரைவு சாலையில் பைக்கில் இவர் பயணித்தார். அப்போது அலிகர் பகுதியில் இவர் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, பைக் சாலை டிவைடரில் மோதி கோர விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்
இந்த விபத்தில் யூடியூபர் அகஸ்தியா சவுகானின் ஹெல்மெட் சுக்குநூறாக உடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அகஸ்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. இதுபோன்ற அச்சுறுத்தலான சாகச பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என காவல்துறையினரும், ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரபல யூடியூபரே இதற்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike race, Road accident