நாடு முழுவதும் ஏற்கனவே கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக குளிர்பானங்களையும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களையும் அதிக அளவில் உட்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை காலங்களில் இளநீர் குடிப்பது, லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள் ஆகியவை மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு பொருட்களாக இருக்கின்றன.
இவற்றின் மூலம் சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதுடன், தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதில் இருந்தும் நம்மால் பாதுகாப்புடன் இருந்து கொள்ள முடியும். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள பெடபள்ளி மாவட்டத்தில் அம்மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட வருடா வருடம் அதிக வெப்பநிலை கோடை காலங்களில் நிலவும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் பலரும் வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள குளிர்ச்சியான உணவுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எனவே, இங்கு வசிக்கும் ஃபலூடா வியாபாரிகளுக்கு இந்த கோடை காலம் என்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் அதிக அளவில் விரும்பி உட்கொள்ளப்படும் உணவுப் பொருளாக ஃபலூடா உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது இந்த ஃபலூடா தான் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை என்பது குறிப்பிடத்தக்கது. கிரீம் மில்க், வெண்ணிலா ஐஸ்கிரீம், ரோஸ் சிரப், டிரை ஃப்ரூட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
மேலும் வழக்கமான மூலப்பொருட்களை தவிர்த்து துளசி மற்றும் சிறிய செர்ரி ஆகியவையும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு பொருளாகவும் இருப்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்திலிருந்து நம்மை குளிர்விக்க உதவுவதால் மக்கள் விலையை பற்றி அவ்வளவு கவலைப்படுவதாக தெரியவில்லை.பெயர் தெரியாத ஒரு இளம் ஃபலூடா வியாபாரி ஒருவர், வெறும் ஃபலூடாக்களை மட்டும் விற்பனை செய்தே தினசரி நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை லாபம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.