முகப்பு /செய்தி /இந்தியா / நியூஸ் 18 மாநாட்டில் ஃபிட்னஸ் ரகசியம் பகிர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்…

நியூஸ் 18 மாநாட்டில் ஃபிட்னஸ் ரகசியம் பகிர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்…

நியூஸ் 18 மாநாட்டில் ஜெய் சங்கர்

நியூஸ் 18 மாநாட்டில் ஜெய் சங்கர்

கடந்த பத்தாண்டுகளில் உடற்தகுதி விழிப்புணர்வு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. உடற்தகுதி உள்ளவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூஸ் 18 நடத்தி வரும் தி ரைசிங் இந்தியா மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தனது ஃபிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். நெட்வொர்க் 18 -ன்  ரைசிங் இந்தியா மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியாவினுடைய வளர்ச்சியில் பங்கேற்றவர்களை அழைத்து கவுரவிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

“நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்க முயற்சி செய்கிறேன். வெளியுறவு அமைச்சர் என்கிற முறையில் எனது பயணங்கள், வெளிநாடுகளில் மாறுபடும் நேரங்கள் உள்ளிட்டவற்றால் எனக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நான் ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கிறேன். நான் டெல்லியில் இருக்கும்போது ஸ்குவாஷ் மற்றும் பேட்மிண்டன் விளையாடுவேன். நான் பயணத்தில் இருக்கும் போது, யோகா செய்வேன். நான் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை ஆரம்பித்தேன். நான் ஒரு உடற்பயிற்சி கூடத்தைக் கண்டால், நான் அங்கு சென்று பயிற்சி மேற்கொள்வேன்.

இன்று நாட்டில் உடற்பயிற்சிக்காக பல விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நான் அதை ஆதரிக்கிறேன் - ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா ஆகிய இயக்கங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் உடற்தகுதி விழிப்புணர்வு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. உடற்தகுதி உள்ளவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நாங்கள் புதிய இந்தியா என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். இது பொருத்தமான பெயர் என்று கருதுகிறேன்.

top videos

    எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் கிரிக்கெட்டும் ஒன்று .விளையாட்டு வீரர்களில் 2 இந்திய அணி வீரர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர். எதிர் அணியில் இருந்து ஆட்டத்தை பறித்து வெற்றியை தேடி தருவதில் வீரேந்தர் சேவாக் சிறப்பாக செயல்படுவார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டாவது மகேந்திர சிங் தோனி. தோனி எப்போதுமே வியூகத்தை வகுத்துக் கொண்டே இருப்பார். ஆட்டத்தின் கடைசி பந்தை வந்தாலும் கூட அவர் அப்போதும் அணியின் வெற்றிக்காக வியூகம் வகுப்பார். எவ்வளவு தான் நெருக்கடி ஏற்பட்டாலும் கூட, அதை சமாளித்து மிகவும் கூலாக அணியை வழி நடத்துவார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இத்தனை வயதிலும் உடலைக்காக ஃபிட்டாக வைத்து மிகச் சிறப்பாக அவர் பந்து வீசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: NEWS18 RISING INDIA