கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இதனையடுத்து, தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
டிவி 9 வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 88 - 98 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 99 - 109 தொகுதிகள் வரையிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 - 26 தொகுதிகள் வரையிலும் மற்றவை 4 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
டிவி 9 | 88 - 98 | 99 - 109 | 21 - 26 | 4 |
ஜீ நியூஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 79 - 94 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 103 - 118 வரையிலும், மஜத 25 - 33 தொகுதிகள் வரையிலும், மற்றவை 2- 5 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
ஜீ நியூஸ் | 79 - 94 | 103 - 118 | 25 - 33 | 2- 5 |
டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 78 - 94 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 106-120 வரையிலும், மஜத 20-26 தொகுதிகள் வரையிலும், மற்றவை 2- 4 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
டைம்ஸ் நவ் | 78 - 94 | 106-120 | 20-26 | 2- 4 |
ரிபப்ளிக் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 85-100 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 94-108 வரையிலும், மஜத 24-32 தொகுதிகள் வரையிலும், மற்றவை 2- 6 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
ரிபப்ளிக் டிவி | 85-100 | 94-108 | 24-32 | 2- 6 |
ஜன் கி பாத் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 94-117 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 91-106 வரையிலும், மஜத 14-24 தொகுதிகள் வரையிலும், மற்றவை 0-2 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
ஜன் கி பாத் | 94-117 | 91-106 | 14-24 | 0-2 |
நியூஸ் நேஷன் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் 86 தொகுதிகளிலும், மஜத 21 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
நியூஸ் நேஷன் | 114 | 86 | 21 | 3 |
ஆசியா நெட் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 94-117 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 91-106 வரையிலும், மஜத 14-24 தொகுதிகள் வரையிலும், மற்றவை 0-2 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
ஆசியா நெட் | 94-117 | 91-106 | 14-24 | 0-2 |
சி-வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 94-117 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 91-106 வரையிலும், மஜத 14-24 தொகுதிகள் வரையிலும், மற்றவை 0-2 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நிறுவனம் | பாஜக | காங்கிரஸ் | மஜத | மற்றவை |
சி-வோட்டர்ஸ் | 83-95 | 100-112 | 21-29 | 2-6 |
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட்ட 8 நிறுவனங்களில், 5 நிறுவனங்கள் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்றே கணித்துள்ளது. இருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காது என்றே கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Karnataka Election 2023