முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive : ‘ராகுல் மட்டுமல்ல; ஜெயலலிதா உள்பட 21 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ – அமித் ஷா பேட்டி

Exclusive : ‘ராகுல் மட்டுமல்ல; ஜெயலலிதா உள்பட 21 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ – அமித் ஷா பேட்டி

அமித் ஷா

அமித் ஷா

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் மட்டுமே குறி வைக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், ஜெயலலிதா, லாலுபிரசாத் யாதவ் உள்பட 21 பேர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க் நிறுவனம் தி ரைசிங் இந்தியா என்ற மாநாட்டை தற்போது நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமித் ஷா அளித்த பதிலில் கூறியதாவது- ஏதோ தான் மட்டுமே எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பிரச்னையை ராகுல் காந்தி திசை திருப்ப பார்க்கிறார். ஜெயலலிதா,லாலு பிரசாத் யாதவ், ரஷித் ஆல்வி உள்பட மொத்தம் 21 எம்.பி., எம்.எல்.ஏக்கள் தண்டனை அளிக்கப்பட்டதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தன் பக்கம் நியாயம் இருந்தால் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரை வேண்டும். அதை விட்டு விட்டு எடுத்ததற்கெல்லாம் பிரதமர் மோடியை குறை சொல்லக் கூடாது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்துமே சட்டத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

First published:

Tags: NEWS18 RISING INDIA