முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணம் சமர்ப்பிக்க வேண்டுமா? ஸ்டேட் வங்கி விளக்கம்..

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணம் சமர்ப்பிக்க வேண்டுமா? ஸ்டேட் வங்கி விளக்கம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Rs 2,000 notes withdrawn: நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக   பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.

அதேபோல, 2,000 நோட்டுகளை வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டு விவகாரம்: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ...

இந்த நிலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித அடையாளம் சான்றிதழ்களையும் வாடிக்கையாளர்கள் சமர்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிளை வங்கிகளுக்கு, தலைமை பொது மேலாளர் முரளிதரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுமக்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் மாற்றிக் கொள்ள கோரிக்கை சீட்டும், அடையாளம் சான்றிதழும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சிரமமின்றி ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான, அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிடுமாறும் அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: RBI, SBI Bank