முகப்பு /செய்தி /இந்தியா / முன்னாள் எம்.பி மகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை... உத்தர பிரதேசத்தில் பரபரப்பு..!

முன்னாள் எம்.பி மகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை... உத்தர பிரதேசத்தில் பரபரப்பு..!

முன்னாள் எம்.பி., அத்திக் அகமது மகன்

முன்னாள் எம்.பி., அத்திக் அகமது மகன்

சண்டையில் ஆசாத் அகமது உள்ளிட்ட இரண்டு பேரும் கொல்லப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமதுவின் மகன் உள்ளிட்ட இரண்டு பேரைக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ராஜூ பால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியாக இருந்த வழக்கறிஞரான உமேஷ் பால், பிரயாக்ராஜில் உள்ள இல்லத்தில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முன்னாள் எம்.பி., அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதில் அத்திக் அகமது ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், ஆசாத் அகமது, குலாம் ஆகியோரை கைது செய்வதற்காக உத்தரப்பிரதேச அதிரடிப்படை காவல் துறையினர் சென்றுள்ளனர்.

Also Read : “உணர்வுகளை புண்படுத்துகிறார்...” - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்..!

அப்போது, காவல் துறையினர் மீது ஆசாத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் ஆசாத் அகமது உள்ளிட்ட இரண்டு பேரும் கொல்லப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆயுதங்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

top videos
    First published:

    Tags: Police encounter, Uttar pradesh