முகப்பு /செய்தி /இந்தியா / ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு..

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு..

மருந்துகள்

மருந்துகள்

சந்தையில் விற்பனையாகும் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர உள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் உள்ளிட்ட 384 அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.

Also Read : கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

இதனால், காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயர உள்ளது.

top videos
    First published:

    Tags: Hiked price, Medicines