முகப்பு /செய்தி /இந்தியா / பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு..!

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு..!

பிபிசி இந்தியா

பிபிசி இந்தியா

பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் பிப்ரவரி மாதம் சோதனை நடத்தினர்.

  • Last Updated :
  • Tamil Nadu |

அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் பிப்ரவரி மாதம் சோதனை நடத்தினர். ஆனால், அது சோதனை அல்ல எனவும், பிபிசி இந்தியா நிறுவனத்தின் கணக்குகளை மட்டுமே ஆய்வு செய்வதாகவும் வருமான வரித்துறை விளக்கமளித்தது.

இந்நிலையில், பிபிசி நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள், இந்த ஆய்வின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றின் அடிப்படையில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க; தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு...!

வெளிநாட்டில் இருந்து பெற்ற நிதியில் முறைகேடு செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிபிசிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாகவும், அதன் அடிப்படையில் பிபிசி அதிகாரி ஒருவர், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: BBC