முகப்பு /செய்தி /இந்தியா / ஆஸ்கர் விருது அன்புக்கு கிடைத்த வெற்றி.. குனித் மோங்கா நெகிழ்ச்சி!

ஆஸ்கர் விருது அன்புக்கு கிடைத்த வெற்றி.. குனித் மோங்கா நெகிழ்ச்சி!

குனித் மோங்கா

குனித் மோங்கா

Elephant whispers producer | the elephant whisperers படத்தை 119 நாடுகளில் உள்ள சுமார் 23 கோடி பேர் பார்வையிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு தெரிவித்தனர் - குனித் மோங்கா.

  • Last Updated :
  • Delhi, India

யானை குட்டியை வளர்ப்பது எவ்வளவு கடினமானது என, the elephant whisperers ஆவணப்படம் மூலம் உலகுக்கு தெரியவந்துள்ளதாக, அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன் தெரிவித்துள்ளார்.

நியூஸ்18 தொலைக்காட்சி குழுமத்தின் சார்பில் ரைசிங் இந்தியா நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில், ஆஸ்கர் விருதை வென்ற the elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனித் மோங்கா பங்கேற்று, படம் குறித்த தனது அனுபவங்களை தெரிவித்தார். குறிப்பாக the elephant whisperers படத்தை 119 நாடுகளில் உள்ள சுமார் 23 கோடி பேர் பார்வையிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு தெரிவித்தனர் என்றார். இதுவே நமது கதைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் என்ற குனித் மோங்கா, ஆஸ்கர் விருது அன்புக்கு கிடைத்த வெற்றி என்றார்.

top videos

    இதே நிகழ்ச்சியில் முதுமலையிலிருந்து காணொலி வாயிலாக, the elephant whisperers படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பொம்மன் யானை குட்டியை வளர்ப்பது எவ்வளவு கடினமானது என தற்போது உலக அளவில் தெரியவந்துள்ளது என்றார்.

    First published:

    Tags: NEWS18 RISING INDIA, Oscar Awards