முகப்பு /செய்தி /இந்தியா / ஜஸ்ட் மிஸ்... காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தமிழக சுற்றுலா பயணி!

ஜஸ்ட் மிஸ்... காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தமிழக சுற்றுலா பயணி!

யானையிடம் தப்பிய சுற்றுலா பயணி

யானையிடம் தப்பிய சுற்றுலா பயணி

Muthanga | கேரள மாநிலம் வயநாட்டு அருகே உள்ள வனப்பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற தமிழக சுற்றுலா பயணி, காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் வயநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை யானை துரத்திய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில்  முத்தங்கா என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வழியாக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த குழுவினரில் ஒருவர் வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையை சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபரைக் கண்ட யானை அவரை துரத்த தொடங்கியுள்ளது.

விபரீதத்தை உணர்ந்த அந்த சுற்றுலா பயணி, அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.  உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் விழுந்து விழுந்து எழுந்து ஓடி உள்ளார். இதற்கிடையே அங்கு வயநாடு வனக்காவலர்களின் பேருந்து அந்த பகுதிக்கு வந்தன. யானை ஒருவரை துரத்தி செல்வதை பார்த்த அவர்கள் பேருந்தில் ஒலியை எழுப்பி உள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு யானை திரும்பி வன பகுதிக்குள் சென்றதால் யானையை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்க சென்ற நபர் நூல் இழையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் தமிழக சுற்றுலா பயணி மீது கேரளா வனத்துறையினர் வன விலங்குகளை தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Elephant, Kerala, Viral