முகப்பு /செய்தி /இந்தியா / சுற்றுச்சூழலுக்கு உகந்த நீலவண்ணச் சாலை... மேற்கு வங்கத்தில் ஒரு புதிய முயற்சி

சுற்றுச்சூழலுக்கு உகந்த நீலவண்ணச் சாலை... மேற்கு வங்கத்தில் ஒரு புதிய முயற்சி

நீல நிற சாலை

நீல நிற சாலை

பிளாஸ்டிக் கழிவுடன் தார் கலவையை சேர்த்து நீல வண்ணச்சாலை மேற்கு வங்காளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • West Bengal, India

வழக்கமாக சாலைகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? கருப்பு கலரில் தானே! ஆனால் மேற்கு வங்காளத்தில் உள்ள சிறிய கிராமமொன்று தனித்துவமான நீல வண்ணச் சாலையை அமைத்துள்ளார்கள். கிழக்கு பார்தமானில் இருக்கும் உச்சலம் கிராமப் பஞ்சாயத்தில் இந்த நீல வண்ணச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதிக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

இந்தச் சாலையை பார்ப்பதற்காக உள்ளூர்வாசிகள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கிராமத்திலுள்ள மற்ற பகுதிகளுக்கும் இதுபோன்ற சாலை போடப்படும் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுடன் தார் கலவையை சேர்த்து இந்த நீல வண்ணச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்ச தரமும் நீண்டகால பயன்பாட்டையும் கொண்டது. 320மீ சாலையை அமைக்க ஏக்லட்சுமி சுங்கச்சாவடியிலிருந்து ரவுத்ரா பாலம் வரை இருக்கும் பிளாஸ்டிக் குப்பையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

22 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குறித்து தான் எல்லாருடைய கவலையும் இருந்தது. ஏனென்றால் அது தார் சாலையை பாழாக்கிவிடும். கடுமையான மழை பெய்தால் சாலை நாசமாகிவிடும் என நிபுணர்கள் கவலைப்பட்டனர்.

கடுமையான வெப்பத்தை இந்த சாலை எப்படி தாக்குப்பிடிக்கும் என்ற பயம் ஆரம்பத்திலே இருந்தது. வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரபு நாடுகளில் உள்ள தார் சாலைகள் அனைத்தும் பிளாஸ்டிக் கலந்து நீல வண்ணம் பூசப்பட்டிருக்கும். அதையே இங்கும் பயன்படுத்தலாம் என முயற்சித்துள்ளார்கள்.

இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த நீல வண்ணச் சாலை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஏனென்றால் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் தார் கலவையினால் இது அமைக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமாயமாதலை குறைக்கவே இத்தகைய புதிய முயற்சியில் இறங்கியுள்ளது ரெய்னா-II பிளாக்கில் உள்ள உச்சலம் கிராம பஞ்சாயத்து.

“பிளாஸ்டிக்கை தார் கலவையோடு சேர்ப்பதால் சாலைக்குள் ஊடுறுவும் தண்ணீரின் போக்கு குறையும். மேலும் சாலைக்கு நீல வண்ணம் பூசப்பட்டுள்ளது. தண்ணீரினால் ஏற்படும் பாதிப்பை இது இன்னும் குறைக்கும். அதுபோல நேரடியாக பாயும் சூரிய கதிர்கள் தார் கலவையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தச் சாலை தண்ணீரையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய அளவிற்கு உள்ளது. முன்பிருந்த சாலைகளை விட இதன் ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்” என இச்சாலை பணிகளில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவர் கூறுகிறார்.

Also Read : Video : ஒடிசா ரயில் கோர விபத்துக்கு காரணமான 13 விநாடிகள்... நடந்தது இதுதான்!

இந்தியாவில் இப்படியான புதிய முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என ரெய்னா பிளாக் 2 எம்எல்ஏ ஷம்பா தாரா கூறுகிறார். “வழக்கமாக இதுபோன்ற சாலைகளை பாலைவனப் பகுதியில் பார்க்கலாம். ஏனென்றால் அங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால் சாலையில் ஊற்றும் தார் உருகிவிடும். அதற்காகவே இதுபோன்ற சாலைகளை தயார் செய்வார்கள். இந்த சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பில்லை; தாரும் உருகாது” என தாரா கூறுகிறார்.

உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இதுவொரு அற்புதமான திட்டம். இந்த சாலையில் நான் கார் ஓட்டிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது. வழுக்கிவிடும் என்ற பயமெல்லாம் இல்லை. புதிதாக இருக்கும் போது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இது எவ்வுளவு காலம் நீடித்திருக்கும் என்பது போக போகத்தான் தெரியும்” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Environment, Local News