முகப்பு /செய்தி /இந்தியா / மிசோரத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

மிசோரத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

மிசோரம் நிலநடுக்கம்

மிசோரம் நிலநடுக்கம்

Mizoram earthquake: மிசோரம் மாநிலத்தில் 4.7 அளவுகோளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Mizoram, India

கடந்த சில வாரங்களாகவே நாட்டின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் அதிகம் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இன்று அதிகாலை வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை நிலநடுக்கத்தினை தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது.

அதன்படி, இன்று ஏப்ரல் 10ஆம் தேதி அதிகாலை 6.16 மணியளவில் சிக்கிமின் சம்பாய் பகுதியில் இருந்து 151 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 23.16 மற்றும் தீர்க்கரேகை: 94.78, என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நில அதிர்வுகள் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் நாகாலாந்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதேவேளை, நில அதிர்வுகள் உணரப்பட்ட பகுதிகளில் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலி வீட்டில் பதுங்கியிருந்த இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்த மனைவி..!

முன்னதாக நேற்று, அந்தமான் நிகோபார் தீவு அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் முறையே 5.3, 4.1, 4.9, 5.5 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Earthquake, Mizoram