முகப்பு /செய்தி /இந்தியா / வங்கக்கடலில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்... பீதியில் உறைந்த அந்தமான் நிகோபார் தீவு மக்கள்!

வங்கக்கடலில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்... பீதியில் உறைந்த அந்தமான் நிகோபார் தீவு மக்கள்!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் முறையே 5.3, 4.1, 4.9, 5.5 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

அந்தமான் நிகோபார் தீவு அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்ப் பெல் பே (CAMP BELL BAY) என்ற பகுதியின் வடக்கில், நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4 .9 ஆக பதிவானது.  இதனை தொடர்ந்து மதியம் 2.59 மணி அளவில் நிகோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது.

3 ஆவது முறையும் நிகோபார் தீவு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 .3 ஆக பதிவானது. 4வது முறையாக நிகோபார் தீவில் கடலுக்கு அடியில்  ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.

top videos

    வங்கக்கடலுக்கு அடியில் தொடர்ந்து 4 முறை நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்சமயத்திற்கு இல்லை என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Earthquake