முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி உட்பட வடமாநிலங்களில் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி..

டெல்லி உட்பட வடமாநிலங்களில் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி..

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

Delhi Earthquake | டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு பொதுமக்கள் அலறியடித்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 21) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனிடையே டெல்லியின் ஷாகர்பூர் பகுதியில் கட்டிடம் ஒன்று திசை திரும்பியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Delhi, Earthquake