முகப்பு /செய்தி /இந்தியா / “பாஜக பேட்ஜ் அணிந்துகொண்டு கேள்வி கேளுங்கள்”... செய்தியாளரை அவமதித்தாரா ராகுல்காந்தி..?

“பாஜக பேட்ஜ் அணிந்துகொண்டு கேள்வி கேளுங்கள்”... செய்தியாளரை அவமதித்தாரா ராகுல்காந்தி..?

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளரை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களின் துணைப் பெயரும் (surname) 'மோடி' என்றே இருக்கிறது என்றார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அவருக்கும் ராகுலுக்கு வாக்குவாதம் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நீங்கள் ஓபிசி சமூகத்தை அவமதித்தாக பாஜக கூறுகிறதே, இந்த குற்றச்சாட்டுக்கு பதில் என்ன ராகுல் காந்தியிடம் நிருபர் கேட்டார்.

உடனடியாக ராகுல்,  “நீங்கள் ஊடகவியலாளர் போல வேடம் போட வேண்டாம். நீங்கள் பாஜகவுக்கு வேலை செய்கிறீர்கள் என்றால், பாஜகவின் சின்னத்தை பேட்ஜாக அணிந்து கொண்டு இங்கு வாருங்கள். அவர்களுக்கு பதில் கூறும் விதத்தில் நான் உங்களுக்கு பதில் அளிப்பேன்.

இதையும் படிங்க: தொண்டர்களை மதிக்காதவர்கள் எப்படி மக்களை மதிப்பார்கள்...? காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி

செய்தியாளராக வேடம் போடாதீர்கள். ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இதே நோக்கத்துடனே அணுகுகிறீர்கள். ஏன் பாஜகவுக்காக இப்படி நேரடியாக வேலை பார்க்கிறீர்கள். கொஞ்சமாவது சுயமாக செயல்படுங்கள்" என்று பதில் கொடுத்தார். மேலும், இந்த பதிலை கேட்டு அமைதியாக சிரித்த நிருபரை பார்த்து ராகுல் காந்தி, ஏன் காற்று இறங்கி போய் விட்டதா என்று கிண்டலடித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் செய்தியாளரை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

First published:

Tags: Journalist, Lok sabha, Rahul Gandhi