முகப்பு /செய்தி /இந்தியா / குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ஸ்வீடன் முதியவர் கைது

குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ஸ்வீடன் முதியவர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இன்டிகோ விமானத்தில் பணிபுரியும் 24 வயது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது செய்யப்ட்டுள்ளார்.

  • Last Updated :
  • Maharashtra, India

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை நோக்கி கடந்த வியாழக்கிழமை அன்று 6E-1052 என்ற இன்டிகோ விமானம் புறப்பட்டு வந்துள்ளது. இந்த விமானத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கலாஸ் எரிக் ஹரால்டு என்ற 63 வயது நபர் பயணித்துள்ளார். இவர் குடிபோதையில் இருந்த நிலையில், விமானம் பறந்து கொண்டிருந்த போது விமான பணிப்பெண் (ஏர் ஹோஸ்டஸ்) உணவு கொடுக்க  கலாஸ் அருகில் வந்துள்ளார்.

அப்போது கலாஸ், 24 வயதான அந்த பெண் ஊழியரிடம் தவறான முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். விமானத்தில் தனக்கு கடல் உணவுகள் வேண்டும் என்று பயணி கேட்க இங்கு சிக்கன் தான் கிடைக்கும் என்றுள்ளார். சரி சிக்கன் தாருங்கள் என கேட்கவே அதற்கான பில் தொகை வழங்க ஏடிஎம் கார்டு ஸ்வைப் இயந்திரத்துடன் பணிப் பெண் வந்துள்ளார்.

அப்போது கார்டை தேய்ப்பது போல பவனை காட்டி பெண் ஊழியரின் கைகளை பிடித்து இழுத்துள்ளார். அதோடு நிற்காமல் பல பயணிகள் முன்னர் வைத்து பெண்ணை தவறான முறையில் சீண்டி தொல்லை கொடுத்துள்ளார். பதறிப்போன பெண் கூச்சலிடவே மற்றவர்கள் வந்து நிலைமையை சரி செய்தனர்.

இந்த கலாட்டாவுக்கு பின்னரும் அந்த பெண்ணை, கலாஸ் வசை சொற்களால் திட்டியுள்ளார். பயணி மீது பெண் ஊழியர் புகார் கொடுத்தநிலையில், விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அலுலர்களிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். தொடர்ந்து காவல்துறையிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: நடுரோட்டில் இப்படியா...? இளம்பெண்களுடன் பைக்கில் ஜாலியாய் வீலிங் செய்த இளைஞன்... தீவிரமாய் தேடும் போலீஸ்..!

top videos

    அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விமானத்தில் சமீப காலமாகவே பயணிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்டதாக 8 முறை புகார் எழுந்து வழக்குகள் பதிவாகியுள்ளது.

    First published:

    Tags: Air hostess, Crime News, Indigo, Indigo Air Service, Mumbai