முகப்பு /செய்தி /இந்தியா / விமான பணிப் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி - நடுவானில் பரபரப்பு

விமான பணிப் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி - நடுவானில் பரபரப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

விமானம் புறப்பட்டபோதே மது அருந்துவதை ஆரம்பித்த ரஜிந்தர் சிங் பின்னர் சக பயணிகளிடமும், அதைத் தொடர்ந்து விமான பணிப் பெண்ணிடமும் வாக்கு வாதம் செய்துள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச விமான நிலையத்தில் விமான பணிப்பெண்ணை சீண்டிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துபாயில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. ஏர்போர்ட்டில் விமானம் இறங்கிய பின்னர், அதிலிருந்த நபர் ஒருவர் விமான பணிப்பெண்ணை பாலியல்

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விமான நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அவர் ஜலந்தர் மாவட்டம் கோட்லி என்ற கிராமத்தை சேர்ந்த ரஜிந்தர் சிங் என்பது தெரியவந்தது. மேலும் அவர், மது அருந்தி விட்டு சக பயணிகளை துன்புறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

விமானம் புறப்பட்டபோதே மது அருந்துவதை ஆரம்பித்த ரஜிந்தர் சிங் பின்னர் சக பயணிகளிடமும், அதைத் தொடர்ந்து அதை கண்டித்த விமான பணிப் பெண்ணிடமும் வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

top videos

    இந்நிலையில் ரஜிந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள விமான நிலைய அதிகாரிகள் அவரை நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 354 மற்றும் 509 ன் கீழ் ரஜிந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: India, Punjab