முகப்பு /செய்தி /இந்தியா / பாதுகாப்பு, வேளாண், மருத்துவத் துறைகளில் ட்ரோன்கள்.. அசத்தும் இந்தியாவின் ட்ரோன் மனிதர்..!

பாதுகாப்பு, வேளாண், மருத்துவத் துறைகளில் ட்ரோன்கள்.. அசத்தும் இந்தியாவின் ட்ரோன் மனிதர்..!

இந்தியாவின் ட்ரோன் மனிதர்

இந்தியாவின் ட்ரோன் மனிதர்

மிலிந்த் ராஜின் பணிகளால் கவரப்பட்ட அப்துல் கலாம் அவருக்கு இந்தியாவின் ட்ரோன் மகன் ('Drone Man of India') என்று பெயர் வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. மற்ற நாடுகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் போர் முறைகளும் மாறியுள்ளன. மாறிவரும் போர் தொழில்நுட்பங்களை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லக்னோவைச் சேர்ந்த ரோபோடிக் ஆராய்ச்சியாளரான மிலிந்த் ராஜ், இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக வலுமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் தயாரித்த ஆளில்லா ட்ரோன்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சதிகளை தகர்தெறியும் அளவுக்கு மேம்பட்டவை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க; பெண்கள் முன்னேற்றத்தில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலை.. ஆய்வில் வெளிவந்த தகவல்..!

தன்னுடைய ட்ரோன்கள் பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார் மிலிந்த். இன்னும் மேம்படுத்தப்பட்ட சிறம்பம்சங்களுடன் கூடிய ட்ரோன்களை தயாரிப்பதில் தற்போது தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இது நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்.

இப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் சக நாடுகளை கண்காணிக்க ஆளில்லா ட்ரோன்களையே பயன்படுத்துகின்றன. பல சமயங்களில் சந்தேகத்திற்கு இடமாக ஆளில்லா ட்ரோன்கள் நாட்டின் எல்லையில் பறந்தன என்பது தொடர்பான செய்திகளையும் பார்த்திருப்போம். அத்தகைய சூழலில் விமானியே இல்லாமல் குண்டுகள் வீசி எதிரி நாட்டின் ட்ரோன்களை அழிக்க நமது ட்ரோன்களை பயன்படுத்தலாம்.

ட்ரோன்களை பாதுகாப்பு துறையில் மட்டுமல்ல பிற துறைகளிலும் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். ட்ரோன்களை மருத்துவத் துறைகளிலும் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்த மிலிந்த், “இவை ஆம்புலன்ஸுக்கு முன்னதாகவே சம்பவ இடத்தை நெருங்கக் கூடியவை. உதாரணமாக, ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் செல்லும் முன் சிகிச்சைக்கு என்ன தேவையோ, அனைத்தையும் ட்ரோன்கள் மூலம் நோயாளிகளுக்கு வழங்க முடியும்.

அதுபோலவே வேளாண் துறையில் புரட்சிகளை நிகழ்த்த கிடைத்த வரப்பிரசாதமாகவே ட்ரோன் உள்ளது. ட்ரோன்கள் மூலம் ரசாயன உரங்களை தெளிக்க முடியும். அதுபோலவே ட்ரோன்கள் மூலமாக ரயில் வழித்தடத்தை கண்காணிக்கலாம். அதில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டால் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து சரிசெய்யும்போது பெரும் விபத்துகளை தவிர்க்க முடியும்” என்றும் கூறுகிறார்.

top videos

    குடியரசு முன்னாள் தலைவரான அப்துல் கலாம் மிலிந்த் ராஜின் பணிகளால் கவரப்பட்டு அவருக்கு இந்தியாவின் ட்ரோன் மகன் ('Drone Man of India') என்று பெயர் வைத்துள்ளார்.

    First published:

    Tags: Drone