முகப்பு /செய்தி /இந்தியா / ஓராண்டில் 5.39 கோடி பயணிகள்... 43% வளர்ச்சி... உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் புதிய சாதனை

ஓராண்டில் 5.39 கோடி பயணிகள்... 43% வளர்ச்சி... உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் புதிய சாதனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நடப்பாண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடி என்ற அளவை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவின்படி, நடப்பாண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடி என்ற அளவை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85% அதிகமாகும். முந்தைய ஆண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 3.52 கோடி பயணிகள் பயணித்தனர்.

மேலும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18% அளவிற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை சேவை அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47% அளவிற்கு மட்டுமே ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பயணிகளின் புகார் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவிற்கு மிகக் குறைவாக உள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 23 நாடுகள்.. 22,000 கி.மீ... அமெரிக்கா டூ இந்தியா ரோடு ட்ரிப் - 53 நாட்கள் காரில் பயணித்த நபர்

இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, ”விமானப் போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

top videos

    சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், நம் நாட்டின் பொருளாதாரம் மட்டும் வலுவடையாமல் நாடுமுழுவதும் மக்களை இணைக்கிறது” என்றார்.

    First published:

    Tags: Flight travel, Jyotiraditya Scindia