இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தற்போது அதிகரித்துள்ளது. உள்நாட்டில் விமான பயணத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் முக்கியமான நகரங்களை இணைத்து சேவை வழங்க அனைத்து முன்னணி விமான சேவை நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களுமே விமான சேவையால் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது உள்நாட்டு சேவைகளை குறைத்துக் கொள்ள விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை ஏற்றம், பராமரிப்புச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவை விமான நிறுவனங்கள் எடுத்துள்ளன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சேவைகளில் இருந்து சுமார் 9 விழுக்காடு சேவைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அதாவது கடந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது இந்திய நகரங்களுக்கிடையே வாரத்திற்கு 25,309 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த கோடை விடுமுறையில் 22,907 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. இந்த சேவை குறைப்பு நடவடிக்கையால் விமானக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
Read More : கேரளாவில் 4 பவுன் தங்க நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்..!
இந்த 22,907விமான சேவைகளும் இந்தியாவில் இருக்கும் 110 விமான நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளதாக விமான சேவை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த 110 விமான நிலையங்கள் தவிர ஜெய்பூர், கூச் பிகார், ஹல்லோங்கி, ஜாம்ஷெட்பூர், பாக்யாங் மற்றும் கோவாவின் மாபோ விமான நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்ட விமான நிலையங்கள் இந்த ஆண்டு கோடை விடுமுறை விமான சேவகைளில் பயன்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோடை விடுமுறை விமான சேவையானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி முடிவடைய உள்ளது. மற்ற விமான நிறுவனங்கள் சேவைகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ கனிசமாக சேவையை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது குளிர் காலத்தில் வாரத்திற்கு 10,085 டிரிப்புகளை வழங்கிய இண்டிகோ, வரும் கோடை விடுமுறையில் 11,465 விமான சேவைகளை வழங்க உள்ளது.
அதே நேரம் குளிர்காலத்தில் வழங்கப்பட்ட சேவையில் இருந்து கோடை விடுமுறையின்போது 30 விழுக்காடு சேவையை குறைத்துக்கொள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய உள்நாட்டு விமான சேவையில் புதிதாக களமிறங்கியுள்ள அகாசா மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் இந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது கணிசமான அளவு விமான சேவைகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.