முகப்பு /செய்தி /இந்தியா / முதலமைச்சர் போஸ்டரை கிழித்து சென்ற அந்த நாயை பிடிங்க சார்... போலீஸில் மகளிர் அணி புகார்

முதலமைச்சர் போஸ்டரை கிழித்து சென்ற அந்த நாயை பிடிங்க சார்... போலீஸில் மகளிர் அணி புகார்

ஸ்டிக்கரை கிழித்த நாய்

ஸ்டிக்கரை கிழித்த நாய்

நாய் ஸ்டிக்கரை கிழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய் மீது அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை அக்கட்சியினர் கடை மற்றும் வீடுகளின் சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் நகரில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை ஒரு நாய் கவ்வி கிழித்த எடுத்துள்ளது. இந்த சம்பவத்தைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

அதனைத்தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் இணைந்து அந்த நாய் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்டிக்கரை கிழித்தது மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவமதித்ததாகக் கூறி, அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

Also Read : இந்தியாவில் 10,000-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு.. அடுத்த 10 நாள்களுக்கு உயரும் என எச்சரிக்கை

top videos

    மேலும், சில இடங்களில் ஆளுங்கட்சி ஒட்டிய ஸ்டிக்கர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்களைத் திருத்தி ஜெகன்மோகன் ரெட்டியை அவமானம் செய்யும் செயல்களில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

    First published:

    Tags: Y S Jaganmohan Reddy, YSR Congress