குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பரோடாவில் உள்ள மகாராஜா சாயஜிராவ் கெய்க்வாட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, புதிய கல்விக் கொள்கை மற்றும் தாய்மொழி கல்வி ஆகியவை குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், "இந்தியாவில் தான் சிறந்த இலக்கணம், இலக்கியம், கவிதைகள் மற்றும் வரலாறுகளை உள்ளடக்கிய பல மொழிகள் உள்ளன. இந்த மொழிகளை மதிப்புமிக்கதாக மாற்றாமல் நம்மால் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியாது. மொழி என்பது உணர்வாகும், அது வெறும் பொருள் அல்ல.
பட்டம் பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஒருபோதும் தாய் மொழியை கைவிடாதீர்கள். தாய் மொழியை விட வேறு மொழியில்தான் மதிப்பு உள்ளது என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள்.
இதையும் படிங்க: “நான் பிரதமர் அலுவலக அதிகாரி...” Z+ பாதுகாப்பு, குண்டு துளைக்காத காரில் வலம்வந்த மோசடி நபர்..!
இதன் காரணமாகத் புதிய கல்விக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடி தாய்மொழி கல்வியை கட்டாயமாக வைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையை அனைவரும் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். மகாராஜ் சாயாஜிராவ், சர்தார் படேல், அம்பேத்கர், அரவிந்தர், காந்தி போன்ற பல தலைவர்களின் சிந்தனைகளை உள்ளடக்கி புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்தவர் அம்பேத்கர். அம்பேத்கர் இளம் வயதில் கல்வி கற்க உதவி செய்தவர் மகாராஜா கெய்க்வாட். கல்வித்துறையில் மகாராஜா கெயிக்வாட்டின் பங்களிப்பு அளப்பரியது. அனைவருக்கும் கட்டாய, இலவச கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரின் எண்ணமும் செயலுமாக இருந்தது." இவ்வாறு அமித் ஷா பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Gujarat, Mothertongue, New Education Policy