முகப்பு /செய்தி /இந்தியா / Karnataka Election Results 2023 | கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023: சித்தராமையா மகன் கருத்துக்கு டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு, காங். அலுவலகத்தில் சலசலப்பு

Karnataka Election Results 2023 | கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023: சித்தராமையா மகன் கருத்துக்கு டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு, காங். அலுவலகத்தில் சலசலப்பு

டி.கே.சிவகுமார் - சித்தராமையா

டி.கே.சிவகுமார் - சித்தராமையா

Karnataka Assembly Elections 2023 | மாநிலத்தின் நலன் கருதி சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது மகன் யதீந்திரா ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமுள்ள 224 இடங்களில் 125க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் மத்தியில் தங்கள் தலைவரே முதல்வராக வேண்டும் என்று போட்டாபோட்டி பேச்சு நடைபெற்று வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் நலன் கருதி சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது மகன் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே அவருடைய கருத்துக்கு டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் கூடிய டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் சித்தராமையா மகன் யதீந்திராவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

கர்நாடகாவின் முக்கிய முகங்களாக இருப்பவர்கள் சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் ஆவர். டி.கே.சிவகுமார் கர்நாடகா காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார், சித்தராமையா கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மூத்த தலைவரும் ஆவார். இதற்கிடையே கர்நாடகாவின் நலன் கருதி தனது தந்தை சித்தராமையாவையே கர்நாடகாவின் முதல்வராக்க வேண்டும் என யதீந்திரா கூறியிருந்ததால், டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை தாண்டி 125க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் நாளை காலை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Karnataka Election 2023, Siddaramaiah