முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் இன்று முதல் திவ்ய தரிசன அனுமதி தொடக்கம்... பக்தர்கள் மகிழ்ச்சி..

திருப்பதியில் இன்று முதல் திவ்ய தரிசன அனுமதி தொடக்கம்... பக்தர்கள் மகிழ்ச்சி..

திருப்பதி திருமலை

திருப்பதி திருமலை

ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடைபாதை வழியாகப் பாதயாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன அனுமதி இன்று முதல் அளிக்கப்படுகிறது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் நடந்து மலையேறிச் சென்று ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு முன்னுரிமை ஏற்பாடாக திவ்ய தரிசனம் என்ற பெயரில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாகப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு இடையில் சாமி தரிசனத்திற்கு உரிய டோக்கன்கள் வழங்கப்படும்.

அலிப்பிரி நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்களுக்குத் தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு தினமும் ஐந்தாயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன.

Also Read : 7 மணிநேரத்தில் 700 கிமீ பயணம்.. புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

கொரோனாவிற்கு முன் இருந்த இந்த நடைமுறை பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று முதல் மீண்டும் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் ஆர்வத்துடன் திவ்ய தரிசன டோக்கன்களை பெற்று கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டுச் செல்கின்றனர்.

First published:

Tags: Tirupati